தட்கல் டிக்கெட் புக் செய்வதில் சிரமமா?ஒரு நிமிடத்தில் Confirm Ticket! எப்படி தெரியுமா?!
Is it difficult to book a Tatkal ticket Confirm Ticket in a minute Do you know how
இந்தியாவில் ரயில்பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானது. ஆனால் திடீர் பயணங்களுக்கு தட்கல் டிக்கெட் புக் செய்வது சிக்கலாக இருக்கிறது. சில நுட்பங்களை பின்பற்றினால், இந்த சிக்கலை எளிதாக சமாளிக்கலாம்.
மாஸ்டர் லிஸ்ட் உருவாக்குங்கள்
IRCTC கணக்கில் My Profile > Add/Modify Master List பகுதியில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, ஐடி விவரங்கள் போன்றவற்றை உள்ளீடு செய்யலாம். இதன் மூலம் புக்கிங் நேரத்தில் பயணிகள் விவரங்களை மீண்டும் மீண்டும் உள்ளிட வேண்டாம்.
ஆதார் இணைப்பு கட்டாயம்
IRCTC > My Account > Authenticate User பகுதியில் உங்கள் ஆதார் எண்ணை இணைக்கவும். OTP மூலம் உறுதிப்படுத்தினால், ஒரு மாதத்தில் 12 தட்கல் டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம்.
சரியான நேரம் கவனிக்கவும்
வேகமான இணையம் & முன்னேற்பாடுகள்
-
4G/5G அல்லது வைஃபை இணையம் பயன்படுதுங்கள்.
-
IRCTC-யில் முன்னதாகவே உள்நுழைந்து இருங்கள்.
-
UPI, Netbanking, Card விபரங்களை தயார் வைத்திருங்கள்.
Ladies Quota மற்றும் மற்ற ரயில்கள்
Auto Upgradation, Premium Tatkal
-
டிக்கெட் வெயிட்டிங் ஆகும் என்றால் Auto Upgradation சலுகையை தேர்வு செய்யுங்கள் – மேலதிக கட்டணமின்றி மேம்பட்ட பெர்த் கிடைக்கும்.
-
அவசரத்துக்காக Premium Tatkal சலுகையை பயன்படுத்தலாம் (தரத்துக்கு ஏற்ற உயர்ந்த கட்டணம்).
Rail Madad / Rail On App – All in One
IRCTC-யின் 'Rail On' செயலியில் முன்பதிவு, உணவு ஆர்டர், PNR ட்ராக்கிங் உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் செய்யலாம்.
ரத்து மற்றும் ரீஃபண்ட் விதிமுறைகள்
-
48 மணி நேரத்திற்கு முன் – ₹240 (AC), ₹120 (Sleeper), ₹60 (2nd Class)
-
12 மணி நேரத்திற்கு முன் – 25% விலக்கு
-
4 மணி நேரத்திற்கு முன் – 50% விலக்கு
-
தட்கல் கன்ஃபார்ம் டிக்கெட்டுக்கு – ரீஃபண்ட் இல்லை
இந்த எளிய வழிகளை பயன்படுத்தி, உங்கள் தட்கல் டிக்கெட் புக்கிங் அனுபவத்தை இனிமையாக்குங்கள்! நாளைக்கு பயணமா? இப்பவே டிக்கெட் புக் பண்ணுங்க – காத்திருக்க வேண்டாம்!
English Summary
Is it difficult to book a Tatkal ticket Confirm Ticket in a minute Do you know how