சட்டென சரிந்த தங்கம் விலை...! நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி...! - இன்றைய நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியதன் தாக்கம், நகை சந்தையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரி உயர்வின் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுகளுடன் பரபரப்பாக நகர்ந்து வருகிறது.

கடந்த மே 12ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,330க்கும், ஒரு பவுன் ரூ.1,14,640க்கும் விற்பனையானது. அதன்பின் சந்தையில் திடீர் விலை ஏற்றம் உருவாகி, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 உயர்வு பதிவானது.

இதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.15,400க்கும், ஒரு பவுன் ரூ.1,23,200க்கும் உயர்ந்து விற்பனையானது.நேற்று தங்கம் விலையில் மீண்டும் ஏற்றம் காணப்பட்ட நிலையில், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15,050க்கும் விற்பனை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று சென்னையில் தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.14,950க்கு விற்பனையாகி வருகிறது.தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையிலும் கணிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.305க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி விலையும் ரூ.3 லட்சத்து 5 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடைசி சில நாட்களின் தங்க விலை நிலவரம்:
14-05-2026 – ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
13-05-2026 – ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,000
12-05-2026 – ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,640
கடைசி சில நாட்களின் வெள்ளி விலை நிலவரம்:
14-05-2026 – ஒரு கிராம் ரூ.315
13-05-2026 – ஒரு கிராம் ரூ.320
12-05-2026 – ஒரு கிராம் ரூ.300


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold prices suddenly fell pleasant surprise jewelers What price situation today


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->