தங்கம் விலை ஆகாயம் தொட்டது...! வரலாறு காணாத விலை - முதலீட்டாளர்கள் கவனம்...!
Gold prices skyrocketed unprecedented price investors take note
தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி வரலாற்றுச் சிறகுடன் பறந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டி முதல்முறையாக சாதனை படைத்தது. அதன் பின்னர் சிறிது சரிவை சந்தித்த தங்கம், அதே மாதம் 22-ந்தேதியிலிருந்து மீண்டும் ஏற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

டிசம்பர் 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்ட தங்கம், அதன்பின் திடீரென விறுவிறுவென இறங்கியது. இவ்வாறு சரிவுகளை கடந்து வந்த தங்கம், கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத் தொடரிலேயே இருந்து வருகிறது.நேற்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது.
அதன் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,450-க்கு சென்றது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் சிறிய பாய்ச்சலை கண்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000-க்கும், கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.318-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,610-க்கு தங்கம் விற்கப்பட்டு வருகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.12,000 உயர்ந்து ரூ.3,30,000-க்கு சென்றுள்ளது. கிராமுக்கு ரூ.12 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.330-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
English Summary
Gold prices skyrocketed unprecedented price investors take note