இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சம்.. அதிர்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எரிபொருள் உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மேலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 

சுற்றுலாத்துறையை பெரிதும் சார்ந்திருந்த இலங்கையில் பொருளாதாரம் கொரோனா தொற்று காரணமாக 90% பாதிப்புக்கு உள்ளானது. அந்நிய செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது. 

அந்நிய செலாவணி கையிருப்பு மோசமாக சரிந்ததால், இடங்களில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை பலமடங்கு அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சமாக அதிகரித்துள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தங்க விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு சவரன் 1.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரு சவரன் 2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold price in srilanka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->