வீழ்ச்சியில் தங்கம்! அதிரடியாகக் குறைந்த விலை...! - இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை எவ்வளவு தெரியுமா...?
Gold falling Prices dropped dramatically Do you know what price gold and silver today
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீர் சரிவை சந்தித்து, நகை சந்தையில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 180 ரூபாய் குறைந்து 13,820 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,440 ரூபாய் வீழ்ச்சி அடைந்து 1,10,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் பாதையைத் தொடர்ந்து வெள்ளி விலையும் சரிவை கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் குறைந்து 265 ரூபாயாகவும், பார் வெள்ளி 2,65,000 ரூபாயாகவும் விற்பனை நடைபெறுகிறது.
கடந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை நிலவரம் பார்க்கையில், மே 4, 3, 2 ஆகிய தேதிகளில் ஒரு பவுன் (22 காரட்) 1,12,000 ரூபாயாக நிலைத்திருந்தது.
மே 1-ஆம் தேதி 1,11,360 ரூபாயாகவும், ஏப்ரல் 30-ஆம் தேதி 1,12,800 ரூபாயாகவும் இருந்தது.அதேபோல், வெள்ளி விலை நிலவரத்தில் மே 4, 3, 2 ஆகிய தேதிகளில் ஒரு கிராம் 270 ரூபாயாக இருந்த நிலையில், மே 1-ஆம் தேதி 265 ரூபாயாக குறைந்தது.
ஏப்ரல் 30-ஆம் தேதி மீண்டும் 270 ரூபாயாக பதிவாகியுள்ளது. தற்போதைய விலை மாற்றங்கள் சந்தை நிலவரத்தை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Gold falling Prices dropped dramatically Do you know what price gold and silver today