நாளுக்கு இருமுறை உயரும் தங்கம்-வெள்ளி விலை: வரலாறு காணாத உச்சம்..!
Gold and silver prices rise twice day Reaching unprecedented highs
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டு அதிகரிக்கிறது. தினமும் விலை மாற்றம் நிகழ்வதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக, தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலை போட்டிப் போட்டியாக உயர்ந்து வருகிறது.கடந்த காலையில், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70, சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது.

பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.130, சவரனுக்கு ரூ.1,040 உயர்வு ஏற்பட்டது. ஒரே நாளில், ஒரு கிராம் தங்கம் ரூ.14,750, ஒரு சவரன் ரூ.1,18,000 விலையில் விற்பனை செய்யப்பட்டது.இன்று விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் தங்கம், ஒரு சவரன் ரூ.2,200 உயர்ந்து ரூ.1,20,200க்கு விற்பனையாகி, ஒரு கிராம் ரூ.15,025 விலை அடைந்துள்ளது.
வெள்ளி விலை நிலையும் இதேபோல் அதிகரித்து, இன்று கிராமுக்கு ரூ.10, கிலோக்கு ரூ.10,000 உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.375, ஒரு கிலோ ரூ.3,75,000க்கு விற்பனையாகிறது.
English Summary
Gold and silver prices rise twice day Reaching unprecedented highs