சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர்கள்.!!
Gas price 105 increase
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 105 உயர்ந்து, ரூ. 2145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாடு உள்ள இந்த சிலிண்டரின் விலை கடந்த மாதம் 2040 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ரூ.105 உயர்ந்து, ரூ. 2145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. தற்போது சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய்.915.50-க்கு விற்கப்படுகிறது.