வணிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிலிண்டர் விலை..!
commercial use cylinder price increase
சர்வதேச சந்தையில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை மாற்றம், இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன் அறிவிப்பு மாதத்தின் முதல் நாள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், தற்போது டிசம்பர் மாதத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அதன் படி, 19 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்துள்ளது. இதனால் ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.1968-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
commercial use cylinder price increase