அதிர்ச்சி கொடுத்த சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. இதுவே வர்த்தக கியாஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி அன்று விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. 

இந்த விலை நிர்ணயம் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் பூப்ரவரி 1 ஆம் தேதியான இன்று வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டது. 

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.12.5 உயர்ந்து ரூ.1,937க்கு விற்பனையாகவுள்ளது. நேற்றுவரை ரூ.1924.50 என்று விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ரூ.1,937க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

அதேசமயம் வீடுகளில் பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமின்றி ரூ.918.50க்கு விற்பனை ஆகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

commercial cylinder gas price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->