#நாமக்கல் || கோழி முட்டை தொடர்ந்து அதிகரிக்கும்.!! பண்ணையாளர்கள் தகவல்.!!
Chicken eggs prize will continue to increase
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2 நாட்களில் கோழி முட்டையின் கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ₹4.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை விற்பனை தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விலையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆடி மாத பண்டிகைகள் நிறைவடைய உள்ளதால் வரும் நாட்களில் முட்டைகளின் தேவை அதிகரிக்க கூடும் எனவும், இதனால் முட்டை விலை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் எனவும் நாமக்கல் கோழி முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக முட்டையின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chicken eggs prize will continue to increase