பிரியாணி கடைகளில் ₹70,000 கோடி வரி ஏய்ப்பு: ‘ஏஐ’ (AI) மூலம் சிக்கிய மெகா மோசடி!
Biryani Bill Scam AI Unmasks 70000 Crore Tax Evasion Mystery
இந்தியாவில் சுடச்சுட விற்பனையாகும் பிரியாணிக்கு பின்னால், சுமார் ₹70,000 கோடி வருவாயை மறைத்து நடந்த பிரம்மாண்ட வரி ஏய்ப்பு மோசடியை வருமான வரித்துறை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடித்துள்ளது.
சுமார் 1.77 லட்சம் பிரியாணி உணவகங்களில் 2019 முதல் 2025 வரை நடந்த விற்பனையை ஏஐ ஸ்கேன் செய்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் அம்பலமானது.
ஏஐ (AI) கண்டுபிடித்த தந்திரங்கள்:
மூலப்பொருள் Vs விற்பனை: உணவகங்கள் வாங்கிய அரிசி மற்றும் இறைச்சியின் அளவுக்கும், அவர்கள் காட்டிய விற்பனை கணக்கிற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது.
ஆன்லைன் டெலிவரி குளறுபடி: ஸ்விக்கி, சொமாட்டோ தளங்களில் விற்கப்பட்ட பிரியாணி எண்ணிக்கையை விட, உணவகங்களின் அதிகாரப்பூர்வ பதிவுகள் மிகக் குறைவாக இருந்தன.
டிஜிட்டல் அழிப்பு: பல கடைகளில் 30 நாட்கள் வரையிலான டிஜிட்டல் ரசீதுகள் மென்பொருள் மூலம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதும், ரொக்கப் பரிமாற்றங்கள் மறைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மாநில வாரியான ஏய்ப்புப் பட்டியல்:
60,000 ஜிபி அளவிலான தரவுகளை நொடிப் பொழுதில் ஆய்வு செய்த ஏஐ, மாநில வாரியாக வரி ஏய்ப்புப் பட்டியலை அடுக்கிக் கொடுத்துள்ளது:
கர்நாடகா: ₹2,000 கோடி.
தெலங்கானா: ₹1,500 கோடி.
தமிழகம்: ₹1,200 கோடி.
மொத்த விற்பனையான ₹2.43 லட்சம் கோடியில், கணக்கில் வராத இந்த ₹70,000 கோடியை மீட்டெடுக்க அதிகாரிகள் இப்போது சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏஐ-யின் இந்த 'சார்ப்' பார்வையில் இருந்து அடுத்ததாகப் பிற வகை உணவகங்களும் தப்பிக்க முடியாது எனத் தெரிகிறது.
English Summary
Biryani Bill Scam AI Unmasks 70000 Crore Tax Evasion Mystery