125cc ஸ்கூட்டர் போரில் புதிய அத்தியாயம்: 2025 TVS Jupiter 125 vs Honda Activa 125 –இவ்வளவு தான் வித்தியாசமா? முழு விவரம்!
A new chapter in the 125cc scooter war 2025 TVS Jupiter 125 vs Honda Activa 125 Is it that much of a difference Full details
125cc ஸ்கூட்டர் பிரிவில் இந்திய சந்தையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடுமையான போட்டியில் உள்ளன. இந்தப் போட்டியை மேலும் கடுமையாக்கும் வகையில், TVS நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்கான புதுப்பித்த Jupiter 125 ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. இது, இந்தியர்களிடையே நீண்ட காலமாக நம்பிக்கையைப் பெற்ற Honda Activa 125 ஸ்கூட்டருக்கு நேரடி சவால் என பார்க்கப்படுகிறது.
இன்ஜின் மற்றும் செயல்திறன்:
Activa 125 ஸ்கூட்டரில் 123.92cc எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இது 6,500 RPM-ல் 8.3 bhp பவர் மற்றும் 5,000 RPM-ல் 10.5 Nm டார்க் வழங்குகிறது. அதேசமயம், Jupiter 125-ல் 124.8cc இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 6,500 RPM-ல் 8.4 bhp பவரையும், 4,500 RPM-ல் 11.1 Nm டார்க்கையும் வழங்குகிறது. இரண்டு வாகனங்களும் CVT கியர்பாக்ஸ் இணைப்புடன் வருகின்றன.
வடிவமைப்பு மற்றும் பரிமாணங்கள்:
Jupiter 125, 1,275 மிமீ வீல்பேஸுடன் வருகிறது, இது Activa 125 விட 15 மிமீ நீளமானது. இருக்கை நீளத்தைப் பொறுத்தவரை, Jupiter 790 மிமீ, Activa 712 மிமீ என Jupiter இங்கு மேலோங்குகிறது. இருப்பினும், Activa 691 மிமீ அகலத்துடன் சிறிது அகலமாக உள்ளது. இரண்டிலும் இருக்கை உயரம் 765 மிமீ ஆக உள்ளது.
டிஜிட்டல் வசதிகள் மற்றும் இணைப்புகள்:
Honda Activa 125-ல் 4.2 இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது பகல்/இரவு காட்சி, ஸ்மார்ட் சாவி, ஹோண்டா ரோடு ஒத்திசைவு, நெவிகேஷன், அழைப்பு, இசை கட்டுப்பாடு, வானிலை உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
TVS Jupiter 125-ல் வழிசெலுத்தல் குரல் வழிகாட்டி, சமூக ஊடக எச்சரிக்கைகள், எரிபொருள் தகவல், வானிலை, செய்தி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் 33 லிட்டர் இருக்கை கீழ் சேமிப்பு, 2 லிட்டர் முன்பக்க கையுறை பெட்டி, "Follow-me" ஹெட்லைட், அபாய விளக்குகள், USB சார்ஜர் போன்ற கூடுதல் வசதிகளும் உள்ளன.
வேரியண்ட்கள் மற்றும் விலை:
Honda Activa 125 இரண்டு வகைகளில் (DLX – ₹95,702 மற்றும் H-Smart – ₹99,674, எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது.
TVS Jupiter 125 நான்கு வகைகளில் (Drum Alloy, Disc, SmartXonnect, Smartzonet), ₹80,740 முதல் ₹92,001 வரை (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
நிறம் தேர்வுகள்:
Activa 125 – 6 வண்ணங்கள்
Jupiter 125 – 8 வண்ணங்கள் (எலிகண்ட் ரெட் முதல் டைட்டானியம் கிரே வரை)
யாருக்கு ஏற்றது?
-
தினசரி பயணத்திற்கும், resale value-க்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள் Activa 125-ஐ தேர்வு செய்யலாம்.
-
கூடுதல் அம்சங்களுடன் விலைக்கு அதிக மதிப்பு தேவைப்படுகிறவர்களுக்கு Jupiter 125 சிறந்த தேர்வாக அமையும்.
முடிவுரை:
2025-ஆம் ஆண்டு ஸ்கூட்டர் சந்தையில் 125cc பிரிவின் மோதல் தெளிவாகத் தெரிகிறது. Activa 125 தனது நம்பகத் தன்மை மற்றும் பிராண்ட் மதிப்பால் இன்னும் வெற்றிபெற்று வருகிறதெனினும், புதிய அம்சங்கள், டிஜிட்டல் வசதிகள், விலை குறைவு என பல இடங்களில் TVS Jupiter 125 சவாலளிக்கக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது.
எனவே, இந்தியாவின் ஸ்கூட்டர் பயணத்தில், இந்த இரண்டு வீரர்களிடையே யார் முன்னிலை வகிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
English Summary
A new chapter in the 125cc scooter war 2025 TVS Jupiter 125 vs Honda Activa 125 Is it that much of a difference Full details