மாதவிடாய் நேரத்தில் கருப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறுகிறதா?.! எளிமையான மற்றும் இயற்கையான தீர்வு.!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு மாதவிடாய் என்ற நிகழ்வானது மாதம் தொடரும் சுழற்சி முறையில் இரண்டு நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை ஏற்படும் இயற்கையான நிகழ்வாகும். இந்த மாதவிடாய் சுழற்சி மாற்றமானது சராசரியாக 28 நாட்களின் சுழற்சி முறையிலும்., 35 நாட்களின் சுழற்சி முறையிலும் ஏற்படும். 

இந்த சமயத்தில்., பெண்களுக்கு அவர்களின் உடல் நலம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து இரத்தத்தின் நிறமானது மாறுபட்டு வெளிப்படும். இந்த நேரத்தில் வெளியேறும் இரத்தத்தின் நிறமானது சிவப்பு., அடர் சிவப்பு., பிரவுன் மற்றும் கருப்பு நிறத்தில் வெளியேறும். 

இந்த நிறமாற்றத்திற்கு காரணமாக கருப்பை பலவீனம் மற்றும் கருப்பையின் சுவர் மெல்லியதாக அமைந்திருத்தல்., இரத்தத்தை சரிவர வெளியேற்ற முடியாத சூழ்நிலை போன்ற காரணங்களும்., இதன் விளைவாக இரத்தம் கருப்பான நிறத்தில் வெளியேறும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு பல இயற்கையான வழிமுறைகள் உள்ளது. கருப்பட்டி மற்றும் கருஞ்சிரகத்தை எடுத்து கொண்டு நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் கருமை நிறத்தில் வெளியேறும் பிரச்சனை சரியாகும். இந்த சாறை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பையின் வலிமை அதிகரித்து., மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக நீங்கும். 

இளம்சூடுள்ள நீரில் ஒரு சிறிய கரண்டியளவு உப்பை சேர்த்து மாதவிடாய் நேரத்தில் மூன்று வேலை குடித்து வந்தால்., இரத்தம் கெட்டியாக வெளியேறும் பிரச்சனையானது குறைக்கப்படும். கருமை நிறத்தில் இரத்தம் வெளியேறினால் திராட்சை பழ சாறை தொடர்ந்து மூன்று முதல் நான்கு மாதம் குடித்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விலக்கம் கிடைக்கும். 

தினமும் பால் பருகும் சமயத்தில் சிறிதளவு குங்கும பூவை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும் இரவு மற்றும் காலை வேளையில் குடித்து வந்தால் கருப்பை சுவர் நன்றாக வலிமை பெரும். கருப்பையில் இருக்கும் எஞ்சிய இரத்தமானது வெளியேறும். இதுமட்டுமல்லது இஞ்சி தேநீரை மாதவிடாய் நேரத்தில் குடித்து வந்தால் வயிற்று வலி பிரச்சனை., இதர மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

when periods leaking blood is black color use this natural hint and solution


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->