தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட இந்த நான்கு ஆசனம் மட்டும் போதும்.!!  - Seithipunal
Seithipunal


இன்றளவில் உள்ள பெரும்பாலானோர் தங்களின் உடல் நலனை பாதுகாக்காமல் இருக்கின்றனர். இதனால் பல பிரச்சனைகளுக்கும் உள்ளாவது வழக்கம். இதனைப்போன்று நமது உடலின் இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாப்பது அவசியமாகும். ஏனெனில் நாம் வாழும் வரை நமக்கு தேவையான மற்றும் முக்கியமான உறுப்பாக இனப்பெருக்க உறுப்புக்கள் இருக்கிறது. 

இனப்பெருக்க உறுப்புக்கள் மூலமாக நாம் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதன் காரணமாக தாம்பத்திய இன்பமும்., அதற்குப்பின் இருக்கும் வாழ்க்கை அழகாக சிறப்பாக இருப்பதற்கு சில யோகாசனங்கள் உள்ளன. இவை குறித்து இனி காண்போம்.

பூர்ணா டிடாலி ஆசனம்: 

இப்போது நாம் காணப்போகும் ஆசனத்தின் மூலமாக இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியமானது அதிகளவு மேம்படும். இந்த ஆசனத்தை மேற்கொள்வது பட்டாம்பூச்சியின் நிலையை போன்று இருக்கும். இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்னதாக முதலில் தரையில் நேராக உட்கார்ந்து., கீழ்காணும் படத்தில் இருக்கும் படி பாதங்களை ஒன்றாக ஒன்று தொடும் படி வைத்து., கைகளை பாதத்தால் பிடித்துக்கொண்டு மெதுவாக மேல் மற்றும் கீழுமாக அசைக்க வேண்டும். 

thitli aasanam, பூர்ணா டிடாலி ஆசனம்,

மேற்கூறிய ஆசனத்தை தொடர்ந்து ஒரு நிமிடம் தொடர்ந்து செய்த பின்னர் சிறிது ஓய்வெடுத்து பின்னரும் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை மூன்று முதல் ஐந்து முறை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதன் மூலமாக தொடைகள் நன்றாக நன்றாக வலுப்பெறும். இடுப்பு பகுதியானது நன்றாக விரிவடைந்து., இனப்பெருக்க உறுப்புக்கள் ஆரோக்கியமாக செயல்பட்டு., மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும். 

Tamil online news Today News in Tamil

ஹனுமனாசனா (Hanumanasana):

ஹனுமாசனா என்ற ஆசனம் படத்தில் கூறியிருப்பது போன்று 180 கோண அளவில் கால்களை விரித்து., பின்னர் கைகளை மேலே தூக்கியவாறு பொறுமையுடன் கால்களை தொட வேண்டும். இந்த நிலையான ஆசனத்தை 30 நொடிகள் செய்ய வேண்டும். இதன் மூலமாக இடுப்பு பகுதியின் இரத்த ஓட்டங்கள் அதிகரித்து., மன அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகள் குறைந்து., தாம்பத்தியத்தில் சிறப்புடன் செயல்படவும் முடியும். 

ஹனுமனாசனா, Hanumanasana,

மலையேறும் நிலை (Mountain Climber Pose):

மலையேறும் நிலையானத்திற்கு தரையில் குப்புற படுத்துக்கொண்டு கைகளை தரையில் ஊன்றி மேலே எழுந்து., இடது கால்களை முன்புறமாக தூக்கி மூச்சை உள்ளே இழுத்து கொள்ள வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு வந்து மூச்சை வெளியேற்ற வேண்டும். இதனை போன்று வலதுபுறமும் செய்ய வேண்டும். இதன் மூலமாக இடுப்பு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து., இடுப்பெலும்புகள் வலிமையனடைந்து தொடை பகுதியில் இருக்கும் தசைகள் பலமடையும். இதன் மூலமாக தாம்பத்தியத்தில் சிறப்பாக இயலும். 

புஜங்காசனம் (Bhujangasana):

புஜங்காசனம் செய்தற்கு தரையில் குப்பற படுத்து., உள்ளகனலி தரையில் ஊன்றி மூச்சை உள்ளித்தவாறே உடலை மேலே தூக்க வேண்டும். இந்த நிலையிலேயே சுமார் 30 நொடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு திரும்பி மூச்சை வெளியேற்ற வேண்டும். இந்த முறையை தினமும் பத்து முறைகள் செய்து வந்தால் இனப்பெருக்க உறுப்புகளின் இரத்த ஓட்டம் அதிகரித்து., தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட இயலும்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to enjoy safely and cutely do this asanam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal