தாம்பத்தியத்தில் புதுமண தம்பதிகள் தெரிந்துகொள்ள வேண்டியது.! - Seithipunal
Seithipunal


மனிதர்கள் இயல்பாகவே தங்களுக்கு தெரிந்த வழிகளில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உணவு பொருளில் இருந்து தங்களுக்கு பிடித்த பொருட்கள் வரை என அது ஒவ்வொரு பொருளுக்கு ஏற்றாற்போல மாறிக்கொண்டே செல்லும். வாய்க்கு ருசியாக வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும், சில நேரங்களில் கடைகளில் உள்ள பொருட்களை வாங்கி சாப்பிடுவது மற்றொரு மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. 

தாம்பத்திய விஷயத்தை பொறுத்த வரையில் தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதன் மூலமாகவும், அதனை மனதில் எண்ணிக்கொண்டு கற்பனைகளை கட்டவிழ்த்து விடுவதாலும் மகிழ்ச்சியடைகின்றனர். தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி திருப்தி அடைந்தால், அவர்கள் இருவரும் தங்களின் தாம்பத்திய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எண்ணி மகிழ்வார்கள். சில மாற்று எண்ணங்கள் கொண்ட தம்பதிகள் தங்களுக்கு பிடித்த அல்லது விரும்பிய நபர்களை மனதில் எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியடைவார்கள். 

தாம்பத்தியத்தில் இன்பத்தை அடைய பலவழிகள் இருக்கிறது. அவைகளில் முதல் வழியாக தாம்பத்திய உணர்வை தூண்டும் வகையில் உள்ள அஸ்திவாரமாக தழுவுதல் இருக்கிறது. கணவன் - மனைவியாக இருக்கும் தம்பதிகளில், தழுவுதல் போன்ற இன்பங்களை அனுபவித்துக்கொள்வது பெரும்பாலும் முதலிரவு அன்றே துவங்கும். ஆனால், காதல் வயப்பட்டு திருமணம் செய்யும் ஜோடிகள் தழுவுதலில் உள்ள இன்பத்தை அவ்வப்போது அனுபவித்து இருப்பார்கள். 

தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொண்ட, திரைப்பட பாணியில்  தனது துணை எதிர்பாராத நேரத்தில் இடித்துவிட்டு செல்லுதல், கட்டித்தழுவுதல், அந்தரங்க இடங்களை தொடுதல் போன்றவை உணர்ச்சியை அதிகரித்து மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் ஜோடிகளை பொறுத்த வரையில் மனித கூட்டத்தின் நடுவே அவசர அவசரமாக கட்டிக்கொள்ளுதல் மற்றும் முத்தம் கொடுத்தல் போன்றவைகளில் ஈடுபடுவார்கள். 

தம்பதிகள் இன்றுள்ள இணைய உலகத்தில் பல்வேறு விதமான புரியாத புதிர்களையும் கண்டறிந்து வருகின்றனர். அதனைப்போலவே பாலியல் ரீதியான சந்தேகத்திற்கும் விடையை தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. தாம்பத்திய உணர்ச்சியை அதிகரிக்க முதலில் தழுவுதல், முத்தம் கொடுத்தல் போன்றவற்றை மேற்கொண்டு, சில நிமிட இடைவெளிக்கு பின்னர் தாம்பத்தியத்தை துவங்கினால் இருபாலருக்கும் உணர்ச்சி பெருகி மகிழ்ச்சி கிடைக்கும். தம்பதிகள் பேசிக்கொண்டு, தனக்கானதை கேட்டு பெறுதல் சாலச்சிறந்தது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Married Couple First Night Partner Satisfaction Tamil 26 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal