டாப் லெவலில் ரோஹித், டி காக், ஸாம்பா! இது வேற லெவல் பட்டியல்! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் 10 அணிகளும் தலா 6 ஆட்டங்களை ஆடியுள்ளன.

புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 5 வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், தலா 4 வெற்றிகளுடன் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

மேலும், தலா ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளனர்.

இதுவரை நடந்த ஆட்டங்களில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் 431 ரன்களுடன், தென்னாப்பிரிக்கா வீரர் டி காக் முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில 413 ரன்களுடன் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர்,
மூன்றாம் இடத்தில 406 ரன்களுடன் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்தரா,
4ம் இடத்தில 398 ரன்களுடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா,
5ம் இடத்தில 356 ரன்களுடன் தென்னாப்பிரிக்கா வீரர் ரோகித் மார்க்ரம் உள்ளார்.

 

அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் 16 விக்கெட்களுடன், ஆஸ்திரேலியா வீரர் ஆடம் ஸாம்பா முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாம் இடத்தில் 14 விக்கெட்களுடன், ஆஸ்திரேலியா வீரர் ஜஸ்ரித் பும்ரா,
3ம் இடத்தில் 14 விக்கெட்களுடன், நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர்,
4ம் இடத்தில் 13 விக்கெட்களுடன், தென்னாப்பிரிக்கா வீரர் மேர்கோ ஜான்சென்,
5ம் இடத்தில் 13 விக்கெட்களுடன், பாகிஸ்தான் வீரர் ஷஹீன் அப்ரிடி உள்ளார்.


அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில், 3 சதங்களுடன் தென்னாப்பிரிக்கா வீரர் டி காக் முதலிடத்தில் உள்ளார். 
இரண்டாம் இடத்தில் 2 சதங்களுடன் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர்,
3ம் இடத்தில் 2 சதங்களுடன் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்தரா உள்ளார்.

 

அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 20 சிக்ஸர்களுடன், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாம்  இடத்தில் 19 சிக்ஸர்களுடன் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர், 
3ம்  இடத்தில் 16 சிக்ஸர்களுடன் தென்னாப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசென் உள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc world cup 2023 oct 30


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->