ரீ ரிலீஸ்க்கு தயாராகும் விஜய் சேதுபதி திரைப்படங்கள்! உற்சாகத்தில் ரசிகர்கள்.!
Vijaysethupathi films ready for rerelease
தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, ௩, விண்ணை தாண்டி வருவாயா, கில்லி போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடி வருகின்றன.
இதனை அடுத்து மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் முன்னிட்டு பில்லா, தீனா போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படங்கள்
ரீ ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 2012 ஆம் வெளியான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய 2 படங்கள் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
English Summary
Vijaysethupathi films ready for rerelease