#RED_ALERT: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் "அதிக கனமழை" பெய்யும்.!! வானிலை மையம் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் சிகப்பு நிற எச்சரிக்கை இன்று ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். அதேபோன்று திருவாரூர் தூத்துக்குடி சிவகங்கை திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும் தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை (17-05-2024) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று வரும் மே 18ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து வரும் மே 19ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும் வரும் மே 20 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதே நாளில் ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Extreme heavy rainfall in 7 districts of 7 districts of Tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->