பொய்களை கூறி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி - பிரதமர் மோடி குற்றசாட்டு!!
Congress lies trying to create riots
நான்கு கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களிடையே பிரதமர் மோடி பேசுகையில், கடந்த எழுவது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கலாச்சாரத்தையும் மதத்தையும் பாதுகாப்பதற்காக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கியாக இல்லாத காரணத்தினால் காங்கிரஸ் அவர்களை பற்றி கவலைப்படுவதில்லை.
இந்தியா கூட்டணி கட்சியினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அகற்றுவோம் என்று கூறி வருகின்றனர். அண்டை நாடுகளில் வாழும் சிறுபான்மையினர்கள் இந்தியாவுக்கு வருமாறு மகாத்மா காந்தியே கூறியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை குறித்து மக்களிடையே பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்று பேசினார்.
English Summary
Congress lies trying to create riots