அஜித் படத்தில் இணைந்த மீனா, சிம்ரன்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


துணிவு படத்தைத் தொடர்ந்தது நடிகர் அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் விடாமுயற்சி. அப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார். அந்த திரைப்படத்திற்கு , குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், இந்த படத்தில் நடிகைகள் சிம்ரன், மீனா இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அஜித்துடன் சிம்ரன் நடித்த வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith movie join meena and simran


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->