ராகுல்காந்தியை புகழ்ந்து தள்ளிய நேபாள் பாடகி சரஸ்வோட்டி பத்ரி.!  - Seithipunal
Seithipunal


நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி நிற்பதும், அவரை சுற்றி உள்ளவர்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது. குறிப்பாக ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் முக்வி, "முழுநேர சுற்றுலா பயணி, பகுதி நேர அரசியல்வாதி. பாசாங்குத்தனம் நிறைந்தவர். பயணம் முடிந்து நேரம் கிடைக்கும்போது, போலி கட்டுக்கதைகளையும் குற்றச்சாட்டுகளை உருவாக்கி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்" என்று விமர்சித்து இருந்தார்.

"ராகுல் காந்தி நண்பரின் திருமண நிகழ்ச்சியில் தான் கலந்துக்கொண்டார். திருமணத்தில் கலந்துகொள்வது சட்டவிரோதம் என்று வருங்காலத்தில் பாஜக அறிவிக்கக்கூடும்" என்று, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், அந்த இரவு விடுதியில் இசை நிகழ்ச்சி நடத்தி பாட்டு பாடிய பாடகி சரஸ்வோட்டி பத்ரி என்பவர் ராகுலை புகழ்ந்து தந்து கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில், "இசை அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும். அந்த சக்தி இசைக்கு உண்டு. ராகுல்காந்தி முன்னிலையில் நான் பாடியதை எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன். அவர் மிக எளிமையாக இருந்தார். அந்த எளிமை என்னை கவர்ந்தது” என்று பாடகி சரஸ்வோட்டி பத்ரி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepali singer say about Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->