நடுவானில் நிலைதடுமாறி ஹெலிகாப்டர்... நூலிழையில் உயிர் தப்பிய அமித்ஷா.!
Amit Shah helicopter midair stuck
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்திற்காக இன்று பீகார் மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
பின்னர் அங்கிருந்து அமித் ஷா ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென ஹெலிகாப்டர் சமநிலையை இழந்ததால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து விமானிகள் உடனடியாக ஹெலிகாப்டரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக சமநிலையை இழந்த விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
English Summary
Amit Shah helicopter midair stuck