அடுத்தடுத்து வீழும் விக்கெட்டுகள்.. தட்டி தூக்கிய ஈபிஎஸ்.!! திமுக‌, பாஜகவுக்கு அதிர்ச்சியில் .!!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி என பல கட்சி கூட்டணி அமைந்திருப்பதால் தமிழ்நாட்டின் வலிமையான கூட்டணியாக கருதப்பட்டது. 

ஆனால் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்ய முடியாமல் திணறி வருகிறது திமுக.

இத்தகைய சூழலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் திமுகவிடம் இருந்து முறையாக அழைப்பு வந்தால் மட்டுமே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எனவும், தகுதி இருப்பதால் மட்டுமே 3 தொகுதிகளை கேட்பதாகவும் கறாராக பேசியுள்ளார். மேலும் அதிமுகவுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு‌ நன்றி தெரிவித்துள்ளார் திருமாவளவன். 

திமுக கூட்டணி இவ்வாறு இருக்க சைலண்ட் மோடில் இருந்த அதிமுக தரப்பு‌ தற்போது தங்களின் தேர்தல் கூட்டணி வேலையில் முழுவீச்சில் ஈடுப்பட்டது. தேமுதிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடித்துள்ள அதிமுக புதிய தமிழகம் கட்சியுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை‌ கூட்டணியை‌ உறுதி செய்துள்ளது. 

அதே போன்று முத்தரையர்கள் பேரவை, அகில அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும்‌ அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் முக்குலத்தோர் ஆதரவு உள்ள பார்வர்டு பிளாக் கட்சி தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு தான் ஆதரவு எனவும், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது‌. அதிமுகவுக்கு சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு பெருகி வருவதால் திமுக மற்றும் பாஜக தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk support increase in election politics


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->