உக்ரைனில் 60 லட்சத்திற்கு அதிகமான குடும்பங்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளன - ஜெலென்ஸ்கி வேதனை - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 9 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டுள்ளதால் கெர்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளன.

இதனால் உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்திய ரஷ்ய படைகள், உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து தாக்கியது. மேலும் கடந்த சில நாட்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்புகளை தாக்குவதற்கு ரஷ்ய படைகள் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.

இதில் உக்ரைன் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யா அழித்துள்ளதால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில் நாட்டில் இன்னும் 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

இதில் தலைநகர் கெய்வில் ஒடெசா, எல்விவ், வின்னிட்சியா மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மின்வெட்டால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தற்போது நாட்டில் மின்வெட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky says More Than 60 lakhs Ukraine Households Hit By Power Cuts


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal