உக்ரைனின் தெற்குப் பகுதியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.! ஜெலன்ஸ்கி.! - Seithipunal
Seithipunal


உக்ரைனின் தெற்குப் பகுதியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய படைகள் கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் படைகளுடன் நேட்டோ படைகளும் இணைந்து எதிர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கிழக்குப் பகுதியான டான்பாஸ் பகுதியில் ரஷ்ய படைகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் தெற்கு பகுதியை மையமாக வைத்து போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனின் தெற்கு பகுதியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky said We will never give up the southern part of Ukraine


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->