ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதி அழிப்பு - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றது. 

மேலும் தற்பொழுது தீவிரமடைந்த இப்போரில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளில் சில முக்கிய நகரங்களை உக்கரை படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் எகிப்தில் நடைபெற்று வரும் ஐநாவின் 27வது பருவநிலை மாற்ற மாநாட்டில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். பின்பு பேசிய அவர், காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகம் போராடுவதை ரஷ்ய போர் தடுப்பதாகவும், திசை திருப்புவதாகவும் குற்றம் சாட்டினார். 

மேலும் ரஷ்ய அதிபர் புதினின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் கடந்த ஆறு மாதங்களில் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு இருப்பதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Zelensky alleges 50 lakh acres of forest destroyed in Ukraine due to Russia attack


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->