பறக்கும் விமானத்தில் பேண்டைக் கழட்டி விமானப் பணிப்பெண்ணிடம் அனாகரிகமான நடந்து கொண்ட இளைஞர்.. பிறகு நடந்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் டப்ளினில் இருந்து நியூயார்க் செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஐரிஷ் நாட்டின் ஷேன் மெக்கினெர்னி என்ற இளைஞர் பயணம் செய்தார். அவர் ஒரு கால்பந்து அகாடமியில் வேலைக்கு சேருவதற்காக சென்றுகொண்டிருந்தார். 

தற்போது கொரோனா காலம் என்பதால் விமானத்தில், விமான பணிப்பெண் அவரிடம் முக கவசம் அணிய பலமுறை வலியுறுத்தினார். ஆனால் அவர் மறுத்து தகராறு செய்து, திடீரென ஒரு கூல்டிரிங்ஸ் பாட்டிலை தூக்கி பயணி ஒருவரின் தலையில் அடித்தார். மேலும் அனாகரிகமான செயலிலும் ஈடுபட்டார்.

இது மட்டுமின்றி, அந்த இளைஞர் தனது பேண்டையும், உள்ளாடைகளை கழட்டி ஒரு விமான பணிப்பெண் மற்றும் பயணிகள் முன்பு அசிங்கமாக நடந்து கொண்டார். அந்த விமான பணிப்பெண் அவர் மீது விமான நிலைய அதிகாரியிடம் புகார் கூறினார். இதனால் அந்த விமானம் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்பு அவர் கைது செய்யப்பட்டார். இந்த குற்றசாட்டை நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested at airport


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal