கனடா : சீக்கிய மாணவர் மீது இனவெறித் தாக்குதல் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


வட அமெரிக்கா நாடான கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் ககன்தீப் சிங் என்ற மாணவர் படித்து வருகிறார் . சீக்கிய மாணவரான இவர் கல்லூரி இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ககன்தீப் சிங் மீது 'விக்' உள்ளிட்டவற்றை வீசி அவரை தொல்லை செய்துள்ளனர். அதற்கு ககன்தீப் சிங் போலீசில் புகார் அளிப்பேன் என்று எச்சரித்துள்ளார். ஆனால், அந்த இளைஞர்கள் அவரை தொடர்ந்து துன்புறுத்தியதால், ஆத்திரமடைந்த ககன்தீப் சிங் பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். 

இதேபோல், அந்த இளைஞர்களும் பேருந்தில் இருந்து கீழே இறங்கி திடீரென ககன்தீப் சிங்கை சரமாரியாகத் தாக்கி அவர் தலையில் இருந்த தலைப்பாகையை பறித்தனர். அதன் பின்னர் அந்த இளைஞர்கள் ககன்தீப் சிங் தலை முடியை பிடித்து தரதரவென சாலையில் இழுத்து சென்றனர். இந்தத் தாக்குதலில் ககன்தீப் சிங் படுகாயம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ககன்தீப் சிங்கை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் இது ஒரு இனவெறி தாக்குதல் என்று வழக்கு பதிவு செய்து மாணவரைத் தாக்கி விட்டு தப்பியோடிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young mans attack sikhs student in canada


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->