மூட்டு வலிக்கு குட்-பை சொல்லுங்கள்... இன்று உலக மூட்டு நோய் தினம்.!!
world joint pain day 2021
உலக ஆர்த்ரிடிஸ் தினம் :
1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம் தேதியை சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் (அ) உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.

நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.
எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி :
கப்பல்களில் பயன்படும் சுழிதிசைகாட்டியை கண்டறிந்த எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1860ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

இவர் ஜப்பானீஸ் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானீஸ் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1930ஆம் ஆண்டு நியூயார்க்கில் மறைந்தார்.
English Summary
world joint pain day 2021