உலகமே உறைந்த நொடிகள்...! ஈரான் மீதான தாக்குதலை திடீரென நிறுத்திய டிரம்ப்...! பின்னணி என்ன...? - Seithipunal
Seithipunal


ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிலையில், அந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி இணைந்து கடும் ராணுவ நடவடிக்கையை தொடங்கின.

இதற்கு பதிலடியாக ஈரானும் அதிரடி தாக்குதல்களை முன்னெடுத்து, இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் முக்கிய பகுதிகளையும் குறிவைத்து தாக்கியது.

சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வளைகுடா மோதல் சுமார் 40 நாட்கள் நீடித்து, உலக நாடுகளில் பதற்றத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

பின்னர் கடந்த மாதம் 8-ந்தேதி இருதரப்பும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தன. அந்த போர் நிறுத்தம் தற்போது வரை அமலில் இருந்தாலும், நிலைமை முழுமையாக சீராகவில்லை.

இந்த மோதலில் ஈரான், லெபனான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் சேர்த்து சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஈரானின் கடற்பரப்பை அமெரிக்கா தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதும், ஹார்முஸ் நீரிணை வழிச்சாலையை ஈரான் மூடியிருப்பதும் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேலும், ஈரான்-அமெரிக்கா இடையே நிரந்தர அமைதி ஒப்பந்தம் உருவாகும் முயற்சிகளும் இன்னும் முடிவுக்கு வராததால், எந்த தருணத்திலும் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் சர்வதேச அளவில் பரவி வருகிறது.

இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைதள பதிவின் மூலம் மறைமுக எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உலக நாடுகளின் கவனத்தை மீண்டும் திருப்பியிருந்தார்.

இந்நிலையில், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீது நாளை நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானுடன் அமைதி உடன்பாடு ஏற்படுத்த தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அவை தோல்வியடைந்தால் மிகப்பெரிய ராணுவ தாக்குதலை எந்த நேரத்திலும் தொடங்க அமெரிக்க படைகள் முழு தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிறுத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான முழு விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், “ஏற்றுக்கொள்ளத்தக்க உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலை உடனடியாக முன்னெடுக்க அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என டிரம்ப் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

world froze moment Trump suddenly stopped attack Iran What background


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->