டொனால்ட் டிரம்பை நேசிக்கும் பாலஸ்தீனிய மக்கள்: வீடியோவை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை..! - Seithipunal
Seithipunal


காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், கடந்த ஓராண்டில்  53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 01 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஆனால், இஸ்ரேல் பயங்கரவாதிகளை மட்டுமே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துவதாக கூறிவருகிறது. குறிப்பாக மக்கள் அடர்த்தியான பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் என்பதால் பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளால், பல சந்தர்ப்பங்கள் திறந்துள்ளன என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று கூறியுள்ளார். இதன்காரணமாக மீதமுள்ள பணய கைதிகளை சொந்த நாட்டுக்கு அழைத்து வரும் சாத்தியம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த போரை நிறுத்தும்படி இஸ்ரேல் பணய கைதிகளின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஒரு விரிவான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி, 50 பணய கைதிகளையும் திரும்ப அழைத்து, காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வேர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அமெரிக்க ஆதரவு பெற்ற நிவாரண உதவி பொருட்கள் காசாவுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செய்தி தொடர்பாளரான கரோலின் லீவிட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

குறித்த வீடியோவில் பாலஸ்தீனிய மக்கள் டிரம்பை நாங்கள் நேசிக்கிறோம். டொனால்டை நேசிக்கிறோம் என கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று டிரம்ப் வெளியிட்ட பதிவு ஒன்றையும் லீவிட் பகிர்ந்துள்ளார். அதில், காசாவில் ஒப்பந்தம் ஏற்படுத்துவோம் என்றும், பணய கைதிகளை மீட்டு கொண்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கியுள்ள பணய கைதிகள் மீட்கப்படும் சாத்தியம் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

White House releases video of Palestinians loving Donald Trump


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->