பூமி எப்போது..எப்படி..மனிதர்கள் வாழும் கிரகமாக மாறியது? நாசாவின் புதிய கண்டுபிடிப்பு! - Seithipunal
Seithipunal


பூமியின் காந்தப்புலம் மற்றும் வளிமண்டல ஆக்சிஜன் அளவுக்கிடையேயான ஆழமான தொடர்பை நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தகவல், பூமி எவ்வாறு உயிர்கள் வாழக்கூடிய கிரகமாக உருவாகியது என்பதைப் பற்றிய நமது புரிதலைப் பெரிதும் மாற்றக்கூடியது என கூறப்படுகிறது.

கடந்த 540 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக, பூமியின் காந்தப்புலம் அதிகரிக்கும் மற்றும் குறையும் கட்டங்களில், அதேபோல் வளிமண்டல ஆக்சிஜனின் அளவிலும் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. முக்கியமானது என்னவென்றால், இந்த இரண்டுக்கும் இடையே காலத் தாமதம் இல்லை என்பதே ஒரு வலுவான தொடர்பின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இந்த தகவலைப் பகிர்ந்த நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வு மையத்தின் புவியியலாளர் வெய்ஜியா குவாங் இதனை, “புவிக் காந்தப்புலத்திற்கும் ஆக்சிஜன் அளவிற்கும் இடையேயான உறவைக் கண்டறிந்த முதல் விஞ்ஞானக் கணிப்பு இது” எனக் கூறியுள்ளார்.

பூமியின் ஆழத்தில் நடைபெறும் இயற்கை செயல்முறைகள் — குறிப்பாக பூகம்ப கட்டமைப்புகள் மற்றும் உள் மையத்தின் இயக்கம் — காந்தப்புலத்தை மட்டுமல்ல, வளிமண்டலத்தின் வேதியியலையும் தாக்குகிறது என இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த நுட்பமான தொடர்பு, பூமி எவ்வாறு பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக உயிர்களை தக்கவைத்து வருகிறது என்பதை விளக்கும் முக்கியமான புள்ளியாக பார்க்கப்படுகிறது.

மேலும், இத்தகைய புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்ற கிரகங்களிலும் ஏற்படுகிறதா, மற்றும் அதனால் உயிர் உருவாகும் சாத்தியம் இருக்கிறதா என்பதைக் கணிக்க இந்த தகவல் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியக் கருவியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இன்னும் இந்த தொடர்புக்குப் பின்னால் உள்ள அறிவியல் விளக்கங்கள் முழுமையாகத் தெளிவடையவில்லை. எனவே, பூமியின் உள் இயக்கவியல் மற்றும் அதன் மேற்பரப்பு சூழ்நிலைகள் இடையே உள்ள இந்த சிக்கலான தொடர்பை மேலும் ஆராய, விஞ்ஞானிகள் தீவிரமாக பணி செய்து வருகின்றனர்.

இந்தத் தொடர்பு உறவின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு, பூமியின் பரிணாம வளர்ச்சி, உயிர்களின் தோற்றம் மற்றும் எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கான புதிய பாதையை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When and how did Earth become a habitable planet NASA new discovery


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->