அமெரிக்கா போக ஆசையா...? கிரீன் கார்டு விதிகளில் திடீர் அதிரடி மாற்றம்...! - யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்...? - Seithipunal
Seithipunal


டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து குடியேற்ற நடைமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறார். இதன் விளைவாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு குடியேற்றவாசிகள் விசா நீட்டிப்பு, நிரந்தர குடியுரிமை அனுமதி மற்றும் கிரீன் கார்டு பெறும் செயல்முறைகளில் கடும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில், கிரீன் கார்டு விதிமுறைகளில் புதிய மாற்றங்களை டிரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கான முக்கிய அனுமதிப்பத்திரமாக கருதப்படும் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த புதிய நடைமுறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிகளின்படி, கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், விண்ணப்ப செயல்முறை நடைபெறும் காலத்தில் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று, அங்கிருந்தே விண்ணப்ப நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க குடியுரிமை வாரியம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய முடிவு, கிரீன் கார்டுக்காக நீண்டகாலமாக காத்திருக்கும் இந்தியர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டு விண்ணப்பதாரர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கிரீன் கார்டு என்பது அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்பு உரிமையை வழங்கும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இந்த அட்டையை பெற்றவர்கள் அமெரிக்காவின் எந்த பகுதியிலும் வசிக்கலாம், பெரும்பாலான நிறுவனங்களில் பணியாற்றலாம், கல்வி பயிலலாம் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நாட்டிற்குள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Want go America Sudden change green card rules Who benefits who loses


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->