ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கைகோர்த்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன்.!! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனிடையே உக்கிரன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய படைகளுக்கு  உத்தரவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் புதினுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

புதின் மற்றும் லாவ்ரோவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க நேட்டோ தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக புதின் மற்றும் லாவ்ரோவின் சொத்துக்கள் மீது ஐரோப்பிய யூனியன் கருவூலத்துறை தடையை அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

USA and UK against Putin


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->