ஹெச்1 பி விசா ; இந்தியர்களை அவமதித்த விவகாரத்தில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வருத்தம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, வெளி​நாடுகளைச் சேர்ந்த தொழிலா​ளர்​களுக்கு ஓராண்​டுக்கு 85,000 எச்1 பி விசா மட்​டுமே விநியோகிக்கிறது. இதில் 75 சதவீதத்தை இந்​தி​யர்​கள் பெறுகின்​றனர். 

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசும்​போது, அமெரிக்​கா​வில் எச்1பி விசாவில் பணி​யாற்​று​வோர் அடிமைத் தொழிலா​ளர்​கள். அவர்​கள், அமெரிக்​கர்​களின் வேலை​வாய்ப்​பு​களை பறிக்​கின்​றனர் என்று தெரிவித்து இருந்தார்.

அதற்கு இந்​தியா கடும் கண்​டனம் தெரிவித்த நிலையில், அமெரிக்​கா​வில் ஆளும் குடியரசு கட்சி மற்​றும் ஜனநாயகக் கட்​சி​யின் மூத்த தலை​வர்​களும் வான்​ஸின் கருத்தை வன்​மையாகக் கண்​டித்​தனர்.

இந்நிலையில் மிச்சிகன் மாகாணம், பிளாட் ராக் பகுதி​யில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில் ஜே.டி.வான்ஸ் பேசுகையில் கூறியதாவது;

எச்1பி விசாவில் பணி​யாற்​று​வோர் குறித்து நான் பேசிய கருத்​துகள் தவறானவை. அதற்​காக வருந்​துகிறேன். எனது மனைவி உஷா இந்​தி​யாவின் தென்​பகுதியை (ஆந்​திரா) பூர்​வி​க​மாகக் கொண்​ட​வர். அவரையும், எனது இந்​திய மாமியார், மாமனாரை​யும் மனப்​பூர்​வ​மாக நேசிக்​கிறேன்.

வெளி​நாடுகளைச் சேர்ந்த திறன்​வாய்ந்த தொழிலா​ளர்​கள் அமெரிக்​கா​வுக்கு வரு​வதை வரவேற்​கிறேன். அதேநேரம் அமெரிக்​கர்​களின் வேலை​வாய்ப்​புக்​கும் முக்​கியத்​து​வம் அளிக்க வேண்​டும். இரண்​டும் சமநிலை​யில் இருக்க வேண்​டும்.'' என்று ஜே.டி.வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US Vice President Vance expresses regret over the incident involving the disparagement of Indians


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->