நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் குளிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்...! ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னையில் புழல் ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அகில்ராம் (14), தருண் ஆகாஷ் (14) ஆகிய இருவரும் அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை இருவரும் தங்களது நண்பர்களுடன் கள்ளிக்குப்பம் அருகே உள்ள புழல் ஏரிக்குக் குளிக்கச் சென்றனர்.நண்பர்கள் அனைவரும் ஏரியில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அகில்ராமும் தருண் ஆகாஷும் ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கினர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், கரையில் இருந்து கூச்சலிட்டு உதவி கோரினர். இருப்பினும், அதற்குள் இரு மாணவர்களும் நீருக்குள் மூழ்கி மாயமாகினர்.இதுகுறித்து மற்ற மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் அளித்த தகவலின் பேரில், அம்பத்தூர் காவலர்களும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து ஏரியில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்த அகில்ராம், தருண் ஆகாஷ் ஆகிய இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tragedy occurred while they happily bathing friends School students drowned lake


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->