மழை பாதிப்புகளைச் சமாளிக்க 2,372 நிவாரண முகாம்கள் தயார்...! அவசர உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு...! - Seithipunal
Seithipunal


சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் விரைந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,"சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து, மாநகரின் பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டது.

மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், 7 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இணைந்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

கனமழையால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளைப் பெறுவதற்கும் சென்னையில் 2,372 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும், மரங்கள் முறிந்து விழுதல், சாலைகளில் மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட அவசரச் சூழல்கள் ஏற்பட்டால், 10771070112 என்ற பேரிடர் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள்.இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2372 relief camps ready deal rain damage Tamil Nadu government announces emergency helpline numbers


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->