அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி செய்தியாளர்களுடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தனியாக படுத்திக்கொண்டு உள்ளார். மேலும், தனது ஐரோப்பா மற்றும் மொரோக்கோ பயணங்களை அவர் ஒத்திவைத்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வழிகாட்டுதலின் படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஆண்டனி பிலிங்கன் கடந்த சில நாட்களாக சந்திக்கவில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுள்ள பிளிங்கன் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமான பிறகு தனது வழக்கமான பணிகள் மற்றும் பயணங்களை தொடங்குவார் என நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US Secretary of State confirmed corona infection!


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->