ரஷ்யாவுடனான சீனாவின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது - அமெரிக்கா - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதில் ரஷ்யா மற்றும் சீன இடையே ராணுவம், பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ரஷ்யா வரும்படி அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவுடனான சீனாவின் செயல்பாடுகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் நடுநிலை வகிப்பதாக கூறி ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும், சீனாவின் இந்த நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்தே சீனா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Us says China relation with Russia is worrisome


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->