விசா நிறுத்தம்: வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா!
US Heavy driver visa cancel
அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த முடிவு, சமீபத்தில் புளோரிடாவில் நிகழ்ந்த சாலை விபத்தையடுத்து எடுக்கப்பட்டது. அந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஜிந்தர் சிங் ஓட்டிய லாரி, கவனக்குறைவால் மினிவேனுடன் மோதியது. இதில் மூவர் உயிரிழந்தனர். ஹர்ஜிந்தர் சிங் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி வந்தது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
அவருக்கு வணிக ஓட்டுநர் உரிமம் கலிஃபோர்னியாவில் வழங்கப்பட்டது. குடியுரிமை இல்லாதவர்களுக்கும் உரிமம் வழங்கும் கொள்கையை பின்பற்றும் அந்த மாநில அரசை புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸின் ஆதரவாளர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த கலிஃபோர்னியா ஆளுநர் கேவின் நியூசோம், டிசாண்டிஸ் விபத்தைக் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார் என தாக்கி விமர்சித்தார். இருவரும் எதிர்கால அதிபர் வேட்பாளர்களாகக் கருதப்படுவதால், இந்த விவகாரம் கடும் அரசியல் மோதலாக மாறியுள்ளது.
இதற்கிடையில், ரூபியோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், வெளிநாட்டு ஓட்டுநர்கள் சாலைகளில் பாதுகாப்பின்மையை அதிகரிக்கின்றனர் என்று சுட்டிக்காட்டி, அவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் எந்த வகை விசாக்கள் பாதிக்கப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்னர், பெரும்பாலும் கனரக வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தும் பி-1 விசாவுக்கு இது பொருந்தாது என்று தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க கனரக வாகன ஓட்டுநர் சங்கங்கள் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளன. அமெரிக்காவில் ஓட்டுநர் பற்றாக்குறை என்பது உண்மையல்ல, குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்களை வேலைக்குக் கொண்டு வரவே நிறுவனங்கள் முயற்சிக்கின்றன என்பதே உண்மை என்று அவர்கள் கூறினர்.
English Summary
US Heavy driver visa cancel