அமெரிக்காவில் நடைபெற இருந்த இஸ்லாமிய மாநாடு திடீர் ரத்து: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, தெற்கு ப்ளோரிடா மேரியட் ஹோட்டலில் நடைபெற இருந்த இஸ்லாமிய அமைப்பின் மாநாடு கடைசி சமயத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய அமைப்பு, யூத எதிர்ப்பு மற்றும் ஹமாஸ் ஆதரவு உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதற்காக போராட்டக்காரர்களின் 100 க்கும் அதிகமான அழைப்புகள் ஹோட்டல் நிர்வாகத்திற்கு வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தெற்கு ப்ளோரிடா, இஸ்லாமியா அமைப்பு நடத்த இருந்த மாநாட்டில் 30 மசூதிகள் மற்றும் இதர அமைப்புகளின் கூட்டணியாக 1000 பேர் கலந்து கொள்ள இருந்தனர். 

இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்திருப்பதாவது, மாநாடு ரத்து செய்யப்பட்டது இஸ்லாமிய சமூகத்தினருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்னர் இஸ்லாமிய குழுக்களும் குடும்பங்களும் அதிக அளவிலான திருமண நிகழ்ச்சிகளை அந்த ஓட்டலில் நடத்தியுள்ளது. 

ஹோட்டல் தரப்பில் பாதுகாப்பு தொடர்பான புகார் எழுவதற்கு முன்பாகவே காவல்துறையும், தனியார் பாதுகாப்பு குழுக்களையும் ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

United States Islamic conference cancellation 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->