வன்முறையை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிக்கும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் - இந்திய பிரதிநிதி ருசிரா கம்பேஜ்.! - Seithipunal
Seithipunal


நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் தெரிவித்ததாவது,

"உக்ரைன் நாட்டின் நிலைமை குறித்து இந்தியா தொடர்ந்து கவலை கொண்டுள்ளது .உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் மோதல் காரணமாக உலகம் முழுவதும் எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவிக்கிறது. 

அதுமட்டுமல்லாமல், உக்ரைன் மோதலின் தாக்கம் கவலையை ஏற்படுத்துகிறது. உக்ரைன் மோதலின் தாக்கம் ஐரோப்பாவிற்கு மட்டுமல்லாமல், உலகளவில் கடுமையான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்கிறது. 

எதிர்வரும் நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் கருங்கடல் தானியங்கள் மற்றும் உரம் தொடர்பான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும், உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்தே, இந்தியா உடனடியாக விரோதப் போக்கை நிறுத்தவும் வன்முறையை நிறுத்தவும் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது. எனவே, வன்முறையை நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN Security Council indian Representative Ruzira Kamboj speach


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->