உக்ரைன் போரில் இதுவரை 7000 அப்பாவின் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் - ஐ.நா அறிக்கை - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் உயிர் சேதமும், பொருள் சேதமும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் இரண்டாம் கட்ட தாக்குதலை தொடங்கிய ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது ட்ரோன்கள் மூலம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் போரில் சுமார் 7000 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் போர் தொடங்கிய பிப்ரவரி 24ஆம் தேதிலிருந்து கடந்த 26ஆம் தேதி வரை சிறுவர், முதியவர்கள், பெண்கள் உட்பட 6884 பேர் கொல்லப்பட்டதாகவும், 10947 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 483 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,633 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Un says 7000 people killed in Ukraine war


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->