ரஷ்யாவிற்கு எதிராக ஐநா சபை தீர்மானம்.. இந்தியா புறக்கணிப்பு.!! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேற்றப் பட்டது.   ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இந்தியா சார்பில் பேசிய ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைனில் போர்  நடைபெறும் பகுதியில் இருந்து எங்கள் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் வெளியேற பாதுகாப்பான மற்றும் தடையற்ற பாதையை கோருவதாக கூறினார். 

உக்ரைனின் அண்டை நாடுகள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றுவதற்கு வசதியாக மூத்த அமைச்சர்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த நேரத்தில் எல்லையை திறந்து அனைத்து வசதிகளையும் எங்கள் தூதரகங்களுக்கு வழங்குவதற்காக, அனைத்து அண்டை நாடுகள் மற்றும் உக்ரைனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். 

உக்ரேனில் மோசமடைந்து ஒரு நிலையை குறித்து இந்திய ஆழ்ந்த கவலையில் உள்ளதாகவும், நாடுகள் இடையேயான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் மட்டுமே தீர்க்க முடியும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளதாக அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN resolution against Russia


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->