ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு சேதம் ஏற்படுவது தற்கொலைக்கு சமம்.! ஐநா பொதுச்செயலாளர் - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரின் தொடக்கத்திலிருந்தே உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜபோரிஜியா அணு மின் நிலையப் பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

மேலும் அணுமின் நிலையத்தை சுற்றி நடைபெறும் தாக்குதல் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே உக்ரைன் சென்றுள்ள துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் உக்ரைன் அதிபருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் செர்னோபில் அணுஉலை பேரழிவு போன்று மற்றொரு தாக்குதல் நிகழக்கூடாது மற்றும் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில், நாங்கள் உக்ரைன் பக்கம் உறுதியாக இருக்கிறோம் என்று துருக்கி அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜாபோரிஜியா அணு உலை ராணுவத்தின் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்றும், அணு உலைக்கு ஏற்படும் சேதம் தற்கொலைக்கு சமம் என்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UN general If any damage happened to Zaporizhia it would be suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->