இந்தியாவில் 4 கோடி பெண்கள் மாயம்.. பெரிய இழப்பை சந்திக்கும் எதிர்காலம்.. கவலையை ஏற்படுத்தும் தகவல்.!!
UN Feel sad about girl baby birth percentage decrease
ஐக்கிய நாடுகளின் சபை அமைப்பில் உள்ள மக்கள் தொகை நிதியம் அமைப்பின் உலக மக்கள் தொகை நிலவரம் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில், கடந்த 1970 ஆம் வருடத்தின் நிலவரப்படி 6 கோடியே 10 இலட்சம் மக்கள் மாயமாகியுள்ளனர். மேலும், 50 வருடத்தில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த வருடமாக 2020 -ல் இந்த எண்ணிக்கை 14 கோடியே 26 இலட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 50 வருடத்தில் 4 கோடியே 58 இலட்சம் பெண்கள் மாயமாகியுள்ளனர். சீனாவில் 7 கோடியே 23 இலட்சம் பெண்கள் மாயமாகியுள்ளனர்.

இவ்வாறு மாயமான நபர்களில் கருவில் அளிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பெண் குழந்தைகளின் கொலையும் அடங்கும். கடந்த 2013 ஆம் வருடத்தில் இருந்து 2017 ஆம் வருடத்திற்குள் இந்தியாவில் 4 இலட்சத்து 60 ஆயிரம் பெண் குழந்தைகள் அழிக்கப்பட்டுள்ளது. இதில் பிறந்தபின்னர் அழிக்கப்பட்டவர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
பெரும்பாலான நாடுகளில் பெண் குழந்தையை தவிர்த்து ஆண் குழந்தையை விரும்பும் சூழல் காரணமாக, பெண் குழந்தைகள் அழிக்கப்படுகின்றனர். ஆண் - பெண் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வும் அதிகரித்து வருகிறது. திருமணத்திற்கான காத்திருக்கும் ஆண்கள், பெண்கள் கிடைக்காததால் திருமணமும் தள்ளி செல்கிறது. குழந்தை திருமணமும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
UN Feel sad about girl baby birth percentage decrease