வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணை சோதனை.! ஐ.நா. கண்டனம் - Seithipunal
Seithipunal


ஐநா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இதனை தென்கொரியா மற்றும் ஜப்பான் உறுதிப்படுத்தியது.

மேலும் இரண்டு ஏவுகணைகளும் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் அருகே உள்ள மேற்கு கடற்கரை நகரிலிருந்து, 100 கிலோ மீட்டர் உயரத்தில், 400 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள நீரில் தரையிறங்கியதாகவும், அந்த பகுதியில் உள்ள விமானங்கள் அல்லது கப்பல்களுக்கு இந்த ஏவுகணையால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனைக்கு ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்த தென்கொரியா, வடகொரியாவை சேர்ந்து நான்கு தனிநபர்கள் மற்றும் ஐந்து நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடையை அறிவித்துள்ளது. மேலும் ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN condemns for North Korea successively 2 missile test


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->