ரஷ்ய அதிபர் புடின் சென்ற ஹெலிகாப்டரை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!
Ukrainian drone attack targeting helicopter carrying Russian President Putin
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த மூன்றரை வருடங்களாக போர் நீடித்து வருகிறது. போரில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில்,உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் பேச்சுவார்த்தைகளில் தோல்வியிலேயே முடிந்துள்ளது. அத்துடன், போர் நீடிப்பு இருந்தாலும், இன்று உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. கிட்டத்தட்ட 266 ட்ரோன்கள், 45 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி உக்ரைனை நிலைகுலைய வைத்துள்ளது.

கடந்த 20-ஆம் தேதி குர்ஸ்க் பகுதிக்கு அதிபர் புடின் ஹெலிகாப்டரில் சென்று கொண்டு இருந்த போது, அதன் பாதையை நோக்கி ட்ரோன் ஒன்று வந்துள்ளது. அதனை இடைமறித்து ரஷ்ய வான் பாதுகாப்புப் படை உடனடியாக அழித்ததில், ஹெலிகாப்டரில் இருந்த ரஷ்ய அதிபர் புடின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், குர்ஸ்க் வான்வெளியில் உக்ரைன் ட்ரோன்கள் எவ்வாறு அத்துமீறி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
Ukrainian drone attack targeting helicopter carrying Russian President Putin