அமெரிக்க அதிபருடன், உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு மற்றும் நிதி உதவி குறித்து ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அந்த நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே சமயத்தில் மற்ற பகுதிகளில் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவில் தொடர்ந்து முன்னேறுவதற்காக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதில், உக்ரைன் பாதுகாப்பு விவகாரம் மற்றும் நிதி உதவி குறித்து இரண்டு முறை தொலைபேசியில் தன்னுடன் பேசியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேச்சுவார்த்தையின்போது ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து விவாதித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தனது நாட்டை முற்றுகையிட்டுள்ள ரஷ்யாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை தடுக்கும் வகையில் அதை தடுப்பு பட்டியலில் சேர்க்க உதவுமாறு வேண்டுகோள் விடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் ரஷ்யா மீது கச்சா எண்ணெய் இறக்குமதி தடையை விதிக்கும் உக்ரைன் கோரிக்கையை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது. இது பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்தும் என்றும், அமெரிக்க நுகர்வோரை பாதிக்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைனுக்கு 10 மில்லியன் டாலர் அளவில் உதவிகள் வழங்கப்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine president discuss with American president


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->