'ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்துங்கள்: தவறினால் ஆபத்தான உலகளாவிய ஆயுதப் போட்டியைத் தூண்டும்': உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள உக்ரைன்..!
Ukraine calls on world leaders to stop Russias invasion
ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஐநாவில் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து ஐ.நா கூட்டத்தில் அவர் பேசியதாவது: ரஷ்யாவின் போரை நிறுத்தவும், அந்நாட்டின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர தீர்க்கமாகச் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால் ஆபத்தான உலகளாவிய ஆயுதப் போட்டியைத் தூண்டும் அபாயம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் போரை விரிவுபடுத்த முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஜெட் விமானங்கள் நேட்டோ வான்வெளியில் அத்துமீறி நுழைகின்றன என்றும் சுட்டிக்காட்டியுளளார்.

அத்துடன், உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை ஆதரவாக இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கும் என்றும், நடந்து வரும் போரில் சோதிக்கப்பட்ட உபகரணங்களை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்ய அதிபர் புடின் இந்த முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடங்கியிருக்காவிட்டால் இவை எதுவும் நடந்திருக்காது என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், ஆயிரக்கணக்கான உக்ரைன் குழந்தைகளை கடத்துவது மற்றும் ஐரோப்பாவின் மிகப்பெரிய சபோரிஜியா அணு மின் நிலையத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து, ஆலை மீண்டும் மின் தடைக்கு உள்ளானது பேரழிவு அபாயத்தை அதிகரித்தது என்று ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
English Summary
Ukraine calls on world leaders to stop Russias invasion